Friday, 31 July 2015

நந்தி தேவர்

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.

திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?

சிலாதர் கண்டெடுத்த சிவக்குழந்தை
————————————————–

வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்கு “சிலாத முனிவர்’ என்ற பெயர் வந்தது.

திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை. கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.

நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்
——————————————————-
சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.

நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது.

தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.

சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.

முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

இதயம் காக்கும் காய்கறிகள்


இதயம் காக்கும் காய்கறிகள்
நன்றி: இனிய திசைகள
காய்கறிகளில் உயிர்ச்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றிலுள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது.

ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக்கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு காத்துப் பராமரிக்கின்றன. பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்த்து வருகிறோம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை விட அதிகமாக நம்மால் பெறமுடிகிறது. இவை ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடல் ஏற்படும் பலவிதப் பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.

இதயம் காக்கும் டர்னிப்

டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளன.

எடையைக் குறைக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது.

நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் வெங்காயம்

வெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

இருமல் போக்கும் இஞ்சி

இஞ்சியில் செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளீ மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

சருமம் காக்கும் கேரட்

கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை நாள்தோறும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும்.

சர்க்கரைநோய் போக்கும் முள்ளங்கி

நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும்.

நரம்புப் பிரச்சனை தீர்க்கும் சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் – பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஆற்றல் அதிகரிக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு உருளைக்கிழங்கைவிடக் குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுன் சுரப்பைச் சீராக வைக்கும.
நன்றி: இனிய திசைகள்.

காலத்தை வென்ற கலாம் 3


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:    

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:    

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர்.

நவ தானியங்கள்


உடலுக்கு ஏற்ற ஒன்பது தானியங்கள்.


நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

சோளம்:- சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.


கம்பு:- கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.


சாமை:- சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.


வரகு:- நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.


கேழ்வரகு:- தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.


கோதுமை:- அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.


பார்லி:- குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

பி.கக்கன்-10


விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் (P. Kakkan) பிறந்த தினம் இன்று (ஜூன் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1908). தந்தை, கிராமக் கோயில் பூசாரி. பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். 12-வது வயதில் படிப்பைத் தொடர முடியாததால் ஒரு வீட்டில் பண்ணை வேலை செய்தார்.

l ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பி.கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

l சிறையில் கசையடி உட்பட பல கொடுமைகளை அனுபவித்தார். 1946-ல் அரசியல் அமைப்பு சட்டசபை தொடங்கப்பட்டது. இவர் அதன் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பணியாற்றினார். காமராசர் முதல்வராக பொறுப்பேற்றபோது அவர் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஏற்றார்.

l 1957-ல் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பொதுப்பணித்துறை, ஹரிஜன நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை களின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். விவசாயத் துறை அமைச் சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

l இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துகளின் முன்னேற்றத்துக்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.

l மேலும் காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அமைச்சரான பிறகும் தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர்.

l அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை.

l இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.

l 1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

l இந்திய அரசு இவர் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கவுரவித்தது. எளிமையின் சின்னமாகவும், பொது வாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் 1981-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் காலமானார்.                       நன்றி(தி இந்து தமிழ்நாளிதழ்)

காலத்தை வென்ற கலாம் 2


வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காதவர் கலாம்... ஏன் தெரியுமா?

மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்றதில்லை. தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார். அதையும் மீறித் தந்தாலும், அவற்றை அந்த இடத்திலேயே விட்டுவிடுவார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் வந்த எந்த அன்பளிப்பையும், ஓய்வு பெற்ற பிறகு தன்னுடன் எடுத்து வரவில்லை.

சில குடியரசுத் தலைவர்கள், ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறும்போது, குடியரசுத் தலைவர் அமரும் அசோக சக்கரம் பொறித்த நாற்காலியையே தூக்கிக் கொண்டு சென்றது வரலாறு.

ஆனால் அப்துல் கலாம் வெளியேறியபோது, இரண்டு சூட்கேஸ்களில் தனது உடை மற்றும் புத்தகங்களை (தான் பணம் கொடுத்து வாங்கியவற்றை மட்டும்) எடுத்துக் கொண்டு வெளியேறினார். கலாம் இப்படி கறாராக இருக்க ஒரு காரணம் இருக்கிறது.

அது ஒரு ப்ளாஷ்பேக். அப்போது, அப்துல் கலாம் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். பள்ளியின் சிறந்த மாணவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் வீட்டில் மின்சாரம் கிடையாது. ஒருநாள் வீட்டில் மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் சத்தமாகப் பாடம் படித்துக் கொண்டிருந்தார் கலாம். ராமேஸ்வரம் திருட்டுப் பயம் இல்லாத ஊர் என்பதால் கலாம் வீட்டுக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அப்பா இல்லை. அம்மா தொழுகையில் இருந்தார். வீட்டுக்குள் ஒருவர் நுழைந்தார்.

கலாமிடம் அவர் தந்தை ஜைனுல்லாபுதீனைப் பற்றி விசாரித்தார். வீட்டுக்குள் கலாமின் அம்மா தொழுகையிலிருந்து பாதியில் எழ வழியில்லாத அளவுக்கு இறைவனை தொழுது கொண்டிருந்தார். வந்தவரின் கையில் ஒரு தாம்பூலத்தட்டு இருந்தது. ‘சரி, இந்தத் தாம்பூலத் தட்டை நீ வாங்கிக் கொள்' என்றார். கலாம் ஒருநிமிடம் யோசித்தார். அம்மாவிடம் கேட்கலாம் என்றால் அவர் தொழுகையில் இருக்கிறார். வாங்காமல் போனால் வந்தவரை அவமானப்படுத்தும்படியாக ஆகிவிடும். வேறு வழியில்லாமல் கலாம் அந்தப் பரிசுப் பொருளை கட்டிலில் வைத்துவிட்டு செல்லுமாறு கூறினார்.

வந்தவர் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார். தாம்பூலத் தட்டில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு பாக்கெட் எல்லாம் இருந்தன. பஞ்சாயத்துத் தேர்தலில் கலாமின் தந்தை வெற்றி பெற்று பஞ்சாயத்து வாரியத் தலைவர் ஆனதால் அவருக்கு லஞ்சம் கொடுக்கவே அந்த மனிதர் கலாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இது தெரியாமல் கலாம் அவர் கொடுத்ததை வாங்கி வைத்துக் கொண்டார்.

ஜைனுல்லாபுதீன் வீட்டுக்குள் வந்தபோது கலாம் நடந்ததைச் சொன்னார். அவ்வளவுதான். கலாமின் தந்தைக்குத் தறிகெட்டுக் கோபம் வந்தது. தாறுமாறாக கலாமைத் திட்ட ஆரம்பித்தார். முதுகில் ஓர் அடியும் விழுந்தது. கலாம் அழ ஆரம்பித்தார்.

கோபம் தணிந்த பின்பு கலாமை அருகில் அழைத்தார் ஜைனுல்லாபுதீன். ‘இதுபோன்ற பரிசுப் பொருள்களைத் தருபவர்கள் ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறவர்கள். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக் கொடுக்கப்படுகின்றன. இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும்,' என்று அறிவுரை செய்தார்.

மேலும் திருக்குரானிலிருந்து சில வரிகளை கோடிட்டு காட்டி ... "இறைவன் ஒருவனுக்கு ஒரு பதவியை கொடுக்கிறான் என்றால்... அவனுக்கு தேவையானவற்றையும் கொடுத்து விடுவான்." அதற்கு மேலாக மனிதன் பெற்றால்..அது தவறான வழியில் வந்த ஆதாயம். இந்த அறிவுறை எனக்கு எப்போதும் வழிகாட்டியாக இருந்தது ... இருந்து வருகிறது... என்றார் கலாம்.

குடியரசுத் தலைவர் பதவி வகித்த கலாமை அவருடைய இறுதி அலுவலக நாளன்று பல வி.ஐ.பி.க்கள் பரிசுப் பொருள்களோடு வந்து சந்தித்தனர். "என் தந்தை ஜைனுல்லாபுதீன் எனக்குக் கொடுத்த அறிவுரை, ஒருபோதும் பரிசுப் பொருளை வாங்காதே. அவர் வழியில் செல்பவன் நான். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்," என்று புன்னகையுடன் பரிசுப் பொருள்களை வாங்க மறுத்துவிட்டார் கலாம்.

இயற்கை மருத்துவம்


இயற்கை மருத்துவம் :-
*************************
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாகவாழ ஓர்
""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""
16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும்
"" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
(முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""
25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.                 வாழ்க வளமுடன்

கலாம் இந்தியா 2020


இந்தியா வரும் 2020ல் வல்லரசு நாடாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு. அது நிறைவேற அவர் கூறும் யோசனைகள் தான் 'இந்தியா 2020 வல்லரசு'க்கான பாதை. கலாமின் கனவை நினைவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி. இது கலாமின் இந்தியா 2020 வல்லரசுக்கான வழிகள்:

*2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும்.
* எழுதப் படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100 சதவீதமாக வேண்டும்.
* ஒவ்வொரு இந்தியனும் ஒருபல்கலைக் கழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும்.
* 'இ - கவர்னன்ஸ்' திட்டத்தை அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
* ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர்; ஒவ்வொரு வருக்கும் கழிப்பறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்ய வேண்டும்.
* சிறந்த செயல்திட்டங்கள் மூலம் தொழிற்சாலை களை நிறுவி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
* இந்தியாவில்வசிக்கும் அனைத்து ஏழைகளுக்கும் மிகக்குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும்.
* இதுவரை அரசு திட்டங்கள் சென்றுஅடையாத ஏழைகளுக்கு திட்டத்தின் பலன் சென்றடைய
வழிவகை செய்ய வேண்டும்.
* விவசாயிகளுக்கு 'நபார்டு' மற்றும் வங்கிகள்
மூலம் கடன் வழங்கி அவர்களை கடன் சுமை யிலிருந்து மீட்க வேண்டும்.
Advertisement

* தொழிற்சாலைகள், பல்கலைக் ஆராய்ச்சியாளர், அறிஞர் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு உற்பத்தி; தானியம் பதப்படுத்துதல்; விவசாய உற்பத்தி ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
* இன்சூரன்ஸ் கம்பனிகள் சிறுகடன்பயிர் காப்பீடு ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தர வேண்டும்.
* கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தம் சமுதாய கடமையாக நினைக்க வேண்டும்.
* தொலைத் தொடர்பு யுகம் என்று நாம் பெருமை கொள்வது உண்மை எனில் இதுவரை பயன் படுத்தாத மக்களை நாம் அணுக செய்ய வேண்டும்.
இதுதான் கலாம் சொல்லும் 'இந்தியா - 2020!'

நெப்போலியன் ஹில்


வெற்றி மொழி - நெப்போலியன் ஹில்
 

1883-ஆம் ஆண்டு பிறந்த நெப்போலியன் ஹில், அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1908-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னெகியை சந்தித்ததே நெப்போலியன் ஹில்லின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிக்கான கார்னெகியின் எளிய செயல்முறை, ஹில்லின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நெப்போலியன் ஹில்லின் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” என்னும் புத்தகம், மிகவும் பிரபலமாக விற்பனையான சிறந்த புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கான இவரது கருத்துகள் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை.

# மனிதனின் மனம் எதை நம்பிக்கையுடன் திட்டமிடுகிறதோ, அதை அடைந்தே தீரும்.

# உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால், சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.

# எப்போது உங்கள் ஆசைகள் போதுமான வலுவுடன் இருகின்றதோ, அப்போது அதனை அடைவதற்கான அதிகபட்ச சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

# எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்.

# முயற்சியில்லாதவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை; வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியை விடுவதில்லை.

# நம்மால் நமது மனதிற்குள் அமைத்திருப்பதே, நம்முடைய ஒரே வரம்புகள் ஆகும்.

# நமது செயல்பாடே, அறிவுத்திறனுக்கான உண்மையான அளவுகோலாகும்.

# அறிவை நோக்கி தொடர்ந்து செல்லும் பாதையே, வெற்றிக்கான வழி.

# நமது இலக்கு என்பது, காலக்கெடுவுடன் கூடிய கனவே.

# எதை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ, அதையே நாம் நம்ப மறுக்கின்றோம்.

# மற்றவர்களின் இயலாமையைப்பற்றி பேச வேண்டும் என்றால், பேசாமலிருப்பதே சிறந்தது.

# விருப்பமே, அனைத்து வெற்றிகளுக்குமான முதல் படியாகும்.

# உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.

# பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.

# தொடர்ச்சியான முயற்சி மற்றும் போராட்டத்தின் மூலமே, வலிமை மற்றும் வளர்ச்சி நமக்கு கிடைகின்றது.

# போராட்ட குணத்தைக் கைவிட மறுப்பவர்களுக்கு, வெற்றி எப்பொழுதும் சாத்தியமே.
 நன்றி (தி இந்து தமிழ் நாளிதழ்)
 

மகத்தான கீரைகள்


கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்:



கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

*

அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை...

அரக்கீரை,
பாலக்கீரை,
தண்டு கீரை,
புளிச்சக்கீரை,
வெந்தயக்கீரை,
முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

***

தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் பயன்கள்:

1. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.

*

2. கீரை சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

*

3. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 5 வயதிற்குட்பட்ட 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைப்பாட்டால், கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

*

4. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது, உடலில் வைட்டமின் ஏவாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

*

5. கீரையில் உள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும்.

*

6. அதிக நேரம் சமைப்பதால், கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது.

*

7. கீரைகள் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

*

8. கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு (ஒரு நாளைக்கு)


* பெண்களுக்கு 100 கிராம்.
* ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (4-6 வயது) 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.


***


குறிப்புகள்:


1. கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே, பெரும்பாலான பெண்கள், கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர்.

*

2. பாக்டீரியாக்கள், கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப் பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரையை மாசுப்படுத்துகின்றன.

*

3. எனவே, கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க, சமைப்பதற்கு முன், கீரையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

*

4. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து, கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே, சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

*

5. கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரம், கீரை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது.

*

6. கீரை சமைக்கும் போது, பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். கீரையை வெயிலில் உலர்த்தினால், அதில் உள்ள பீடா கராட்டின் சத்து அழிந்து விடும்.


***

காலத்தை வென்ற கலாம் 1


நம் கலாமுக்கு இன்னொரு பெயர் உண்டு...'கலோனல் பிருத்விராஜ்'

பொக்ரான் அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர். பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.

கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம். மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர்.

ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார்.

இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்..

மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!.

இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.

இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது.

1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.

2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.

3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.

நன்றி - புத்தர் சிரித்தாலும் சிரித்தார் - ஏ.கே.கான்

ஆன்மா


ஆன்மா என்பது ஒளியானது அந்த ஆன்மாவை இந்த உலகத்தில் வாழ்வதற்காக இறைவன் அனுப்பி வைக்கின்றார் .

ஆன்மா இந்த உலகத்தில் பல கோடி பிறவிகள் எடுத்து வாழ்ந்து இறுதியாக மனித தேகம் எடுத்து ,மேற்கொண்டு பிறவி எடுக்காமலும் இறந்து போகாமலும் வாழ்வதுதான் மனிதப் பிறவியின் நோக்கம் ,இறைவனின் சட்டம் .

ஆனால் ஆன்மா அழியாது உடம்பும் உயிரும் அழிந்துவிடும் .ஆன்மா யோகத்தின் பயனாக முக்தி அடைகின்றது என்றும் .மேலும் சொர்க்கம் கைலாயம் .வைகுண்ட பதவி அடைகின்றது என்றும் சமய மதங்கள் சொல்லுகின்றன .

ஆன்மா அழியாது என்பதும் அழிக்க முடியாது என்பதும்  எல்லோருக்கும் தெரியும் .

இதற்கு வள்ளல்பெருமான் வந்துதான் ஆன்மாவின் தன்மை என்னவென்றும் ,அது எங்கு இருந்து வந்தது என்றும்.ஏன் வந்தது என்றும் ,எப்படி வாழ்ந்தது என்றும்.அதன் இறுதி முடிவு என்னவென்றும்.அது எப்படி இறைவனிடம் செல்லமுடியும் என்பதை, ஓர் உண்மையான வழியைக் காட்டுகின்றார்.

இதுவரை சமய மதங்கள் சொல்லி வந்த பாதைக்கும்,வள்ளல்பெருமான் சொல்லிய பாதைக்கும் ந நிறைய வேறுபாடுகளும் வித்தியாசமும் மாறுபாடும் உள்ளன .

மனித தேகம் எடுத்த ஆன்மா பிறப்பு இல்லாமலும் .இறப்பு இல்லாமலும் .தன்னுடைய உயிரையும் உடம்பையும் ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இறைவன் இடத்திற்கு செல்லமுடியும் .

வேறு எந்த வழியாலும் செல்லமுடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார் .சொல்லியது மட்டும் அல்ல .அவரே வாழ்ந்து வழியும் காட்டி உள்ளார்

இதுவரையில் ஆணவம் மாயை,கன்மம்,போன்ற மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன.

இந்த மலங்களை ஒழுக்கத்தினாலும்,ஜீவ காருண்யத்தாலும் ,அதாவது சத் விசாரத்தாலும்,பரோபகாரத்தாலும் .விளக்க வேண்டும்

அப்படி விலகினால் மட்டுமே ஆன்மா இறைவனுடைய அருளைப் பெற்று ,தன்னுடைய ஊன உடம்பை ஒளியான ஒளி உடம்பைப் பெற்று எங்கு வேண்டுமானாலும் செல்லும் ஆற்றலைப் பெரும்.

இறைவன் எப்படி எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றாரோ அப்படி ஆன்மாவும் எங்கும் நீக்க மற நிறைந்து இருக்கும் .அதுவே பேரின்ப வாழ்வு என்பதாகும்.

அதுவே மரணம் இல்லாப் பெருமாழ்வு என்பதாகும்.இறைவனுக்கு எப்படி பிறப்பு இறப்பு இல்லையோ அப்படி பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வதுதான் ஆன்மாவின்  இறுதி முடிவாகும்.

ஆன்மா உயிருடனும்,உடம்புடனும் மரணம் அடைந்தால்,அதன் வாழ்க்கையின் தன்மைக்குத் தகுந்தாற் போல்  பிறப்பு நிச்சயம் உண்டு.

ஆன்மா உயிரும் உடம்பும் எடுக்காமல் தனித்து இருக்க வேண்டும்.

ஆன்மா தன்னுடைய் அருள் ஆற்றலால் ஒளி உடம்பாக மாற்றாது வரை இந்த உலகத்தில் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,பிறவிகள் எடுத்துக் கொண்டே  இருக்க வேண்டியதுதான் .

வேறு எந்த வழியாலும் ஆன்மா இந்த உலகத்தை விட்டு வெளியே செல்லவே முடியாது.இதுதான் இயற்கையின் சட்டம்.

ஆன்மா இந்த உலகத்தில் எத்தன்மையாக வந்ததோ ,அதே தன்மையாக தன்னை மாற்றிக் கொண்டு திரும்பிச் செல்ல வேண்டும் .

இதுதான் வள்ளல்பெருமானின் முடிந்த முடிவான உண்மையாகும் .

வள்ளல்பெருமான் சொல்லியதைக் கேட்டு அதன்படி வாழ்ந்தால் நிச்சயம் நன்மைப் பயக்கும்.

வையத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கை அதே வாழ்க்கை என மதித்து மயங்காதீர்

மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத் தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இதுதானே .

என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார் .

மண்ணில் மறைந்தவர்களும்,வானத்தில் மறைந்தவர்களும்,மற்றும் எங்கு எங்கு ,எப்படி எப்படி மறைந்து இருந்தாலும் .அதுவெல்லாம் வாழ்க்கை என்பது அல்ல .

முத்தி என்பது வாழ்க்கை அல்ல ..சித்திப் பெறுவதே வாழ்க்கை

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்

முத்திக்கும் சித்திக்கும் உள்ள வேறு பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்...

Thursday, 30 July 2015

தூக்கம்


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது:

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும்,
உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட
வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும்
சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய
சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும்
என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க
மெத்தனுக் கமைந்த மென்பவை
களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய்
கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண் .

இதன் விளக்கம் :- இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,பயம், படபடப்பு, அக்னி
மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து

வரும் காந்தசக்திதலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள்,
நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண
வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும்,
வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக
ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால்
உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம்
வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில்
உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை
நாமும் பின்பற்றி பயன் பெறுவோம்.
========================================

தியானம் செய்வோம் வாருங்கள்


தியானம் என்றால் என்ன?

அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும். தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றது. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

தியானத்தில் இறை அன்பு இருக்கிறது.
தியானம் நமது வாழ்க்கையை இனிதாக்கும்.
தியானம் கஷ்டங்களைப் போக்கிவிடும்.
தியானம் என்பது மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை நினைப்பது. தியானம் செய்பவரின் நோக்கம் மற்றவர்களையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும்.

தியானம் என்பது கடினமான விஷயம் அல்ல. அது மிக மிக எளிதான ஒன்ற

தினசரி தியானம் செய்வோம். அளப்பரிய பலன்களை பெறுவோம்.

தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 50 நன்மைகள் !

உடல் ரீதியான நன்மைகள்

1. பிராணவாயுவின் தேவையை குறைக்கிறது

2. மூச்சு விடும் சுற்றை குறைக்கிறது (ஒரு நிமிடத்துக்கு நாம் எவ்வளவு முறை மூச்சு விடுகிறோம் என்பது நமது ஆயுள் சம்பந்தப்பட்டது. குறைந்த மூச்சு நிறைந்த ஆயுள்!)

3. இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை  இயங்க செய்கிறது

4. உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையை மாற்றி உடலை உடற்பயிற்சிக்கு தயார் செய்கிறது.

5. நம் உடலுக்கு அவ்வப்போது மிகவும் தேவையான ஆழ்ந்த ஓய்வை தருகிறது

6. அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தியானம் ஒரு மிகச் சிறந்த மருந்து



7. இரத்தத்தில் உள்ள lactic acid அளவை R குறைத்து அச்ச உணர்வினால் ஏற்படும் நோய்களை பூரணமாக விரட்டுகிறது.

8. தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது.

9. அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோய்கள் வராமல் காக்கிறது

10. பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான பயங்களை போக்கி அது சீராக இருக்க உதவுகிறது.

11. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்துகிறது

12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

13. வைரஸ்களின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கிறது. மனக்கவலையை போக்குகிறது.

14. ஆற்றல், சக்தி, வீரியத்தை அத்கிகரிக்கிறது

15. உடல் எடையை கட்டுக்கள் I வைக்க உதவுகிறது

16. திசுக்களை பாதுக்காக்க உதவுகிறது.

17. தோலுக்கு பலம் கூடுகிறது. (Higher skin resistance)

18. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது

19. நுரையீரலுக்கு சரியான அளவு பிராணவாயு செல்ல உதவுகிறது.

20. முதுமையை ஒத்திப்போடுகிறது.

21. நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் Dehydroepiandrosterone என்ற ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உதவுகிறது.

22. நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்த G உதவுகிறது.

23. வியர்வையை கட்டுப்படுகிறது

24. மைக்ரேன் மற்றும் தலைவழியை போக்குகிறது

25. மூளையை நன்கு இயங்கச் செய்கிறது

26. உடலுக்கான மருத்தவ தேவையை குறைக்கிறது

27. நமது சக்தி (எனர்ஜி) விரயமாகாமல் பாதுகாக்கிறது.

28. விளையாட்டு மற்றும் H இதர செயல்பாடுகிளில் ஆர்வத்தை தூண்டுகிறது

29. ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது

30. விளையாட்டு போட்டிகளில் நாம் சிறப்பாக விளையாட உதவுகிறது

31, உங்கள் உடலுக்கு தேவையான எடையை அளிக்கிறது

32. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக வைக்கிறது

33. நமது நரம்பு மண்டலத்தை பாதுக்கக்கிறது

34. மூளையின் மின் செயல்பாடுகளை பராமரிக்கிறது (brain electrical activity).

35. ஆண்மைக்குறைவை போக்குகிறது.

மன ரீதியான நன்மைகள்

36. தன்னமபிக்கையை அதிகரிக்கிறது

37. நமது இரத்தத்தில் செரோடொனின் அளவை அதகரித்து நமது மனோநிலையையும் நடத்தையையும் சரியாக இருக்க செய்கிறது.

38. தேவையற்ற அச்சத்தை போக்கி பயம் சார்ந்த நோய்களை விரட்டுகிறது.

39. நமது எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது.

40. நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி குறிக்கோளில் கவனம் செலுத்த உதவுகிறது.



41. கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றலை அதிகரிக்கிறது

42.  மூளையின் மொத்த சமச்சீர் செயல்பாட்டை (Brain wave coherence) அதிகரிக்கிறது

43. கற்கும் ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது

44. மனதுக்கு உற்சாகத்தையும் இளமையையும் தருகிறது

45. உணர்சிகளை கட்டுக்கள் வைக்க உதவுகிறது

46. உறவுமுறைகளை மேம்படுத்துகிறது

47. மூளைக்கு முதுமை ஒத்திப்போடப்படுகிறது.

48. தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை விரட்டி விடுகிறது

49. உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.

50. நமது உடலின் மொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

பதஞ்சலி


ஓம்காரம் - பதஞ்சலி
ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

ஓ+ம் = ஓம்

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்!